Skip to content

இணையில்லா தேவனே

Published: at 08:23 PM

இணையில்லா தேவனே
இணைத்தீரே இன்னாளில்
இரு கரம் பற்றிக் கொள்ளுமே
இயேசையப்பா…

  1. தாயின் கருவினில் கண்டவரே
    தலை நரைக்கும் வரை காப்பவரே
    தரிசனம் இவர் வாழ்வில் தினம் காண
    உம் ஆசீர் என்றும் வேண்டுகின்றோம்

  2. முதல் அற்புதம் திருமணத்தில்
    குறைவேதும் இல்லாமல் காத்தவரே
    குறைவிலும் இவர்கள் நிறைவாக
    உம் அன்பில் என்றும் வளரச் செய்யும்

  3. செடியோடு கொடியாக இணைந்திட வேண்டும்
    கனி பல கொடுத்து மகிழ்த்திட வேண்டும்
    உறவுகள் கூடி வர வேண்டும்
    உம் அன்பு என்றும் பெருக வேண்டும்