Skip to content

உம் துணை வேண்டி

Published: at 08:23 PM

உம் துணை வேண்டி வருகின்றேன்
எனக்கதை இன்று அருள்வாயோ (தருவாயோ)
வாழ்க்கையின் பாதை கடினமையா
உம் துணை இருந்தாலது லேசையா

என்னிடம் ஒன்றும் இல்லை என்று
என் வாழ்வு பாவம் மிக்குந்ததென்று
அறிந்தும் நான் உம் தயை நம்பி வந்தேன்
அருட்கடலே வேண்டல் கேட்டிடுவாய்