Skip to content

அமர்ந்து காத்திருப்பேன்

Published: at 08:23 PM

அமர்ந்து காத்திருப்பேன்
எந்தன் அப்பாவின் சமூகத்திலே

அவர் பேச நான் கேட்பேன்
அதுதான் என் ஜெப நேரம்
நான் பேச அவர் கேட்பார்
அதுதான் என் ஜெப நேரம்

  1. அதிகாலையில் வாஞ்சையோடே
    அவர் பாதம் அமர்ந்திருப்பேன்
    துதித்திடுவேன் தூயரயே
    துரிதமாய் வந்திடுவார்

  2. அறிக்கை செய்வோம் அவரிடமே
    அன்புடன் அணைப்பாரே
    பாவங்களை மன்னிப்பாரே
    பரிசுத்தம் செய்வாரே

  3. ஊற்றிடுவேன் பாரங்களை
    தேற்றிடும் நேசரிடம்
    துடைத்திடுவார் கண்ணீரை
    மகிழ்ந்து நான் துதித்திடுவேன்

  4. பரன் சித்தமே பூமியிலே
    நாள்தோறும் செய்யணுமே
    தேவராஜ்யம் வளரனுமே
    தினம் அருள் தாரும் என்பேன்