எல்லாம் மாயை ஆனதே
எல்லாம் அர்த்தம் அற்றதே
எல்லாம் நிலை அற்றதே
இந்த மனித வாழ்விலே
எல்லாம் நல்லதாகவே தோன்றினதே
ஆனால் நிலையானது இல்லையே
எல்லாம் நல்லதாகவே தோன்றினதே
ஆனால் நிறைவானது இல்லையே
நீரே உண்மையானவர்
நீரே நிலையானவர்
நான் மனம் மாற
நீரே காரணர்
நீரே நிறைவானவர் என்றுமே
உம் வார்த்தை நிலையானதே
நீரே கனத்திக்கு பாத்திரரே
உம் நாமம் மேன்மை ஆனதே